இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த நிதி நகரமாக அமராவதி நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், முக்கியப் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒரே திட்டமிடப்பட்ட நிதி மையத்தில் அமைக்கும்.
15க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள் உள்கட்டமைப்பு கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளன.
எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள வங்கியை ஆதரிக்க, குவாண்டம் நுட்பப் பகுதி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களுக்கான மாவட்ட அளவிலானப் பயிற்சி மையங்களும் இந்த முன்னெடுப்பில் அடங்கும்.