இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வான முதல் பானிபட் போர் நடைபெற்று, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் 500 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
முதல் பானிபட் போர் 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று, தற்போதைய இந்தியாவின் ஹரியானாவில் உள்ள பானிபட்டில் நடைபெற்றது.
இது முகலாயப் பேரரசை நிறுவிய பாபருக்கும், டெல்லி சுல்தானகத்தின் கடைசி சுல்தானான இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்றது.
பாபர் மேம்பட்ட துலுக்மா தந்திரோபாயங்களையும் (பக்கவாட்டு நகர்வு), பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட களப் பீரங்கிகளையும் பயன்படுத்தினார், இது அவருக்கு ஒரு பெரிய பலனைக்க் கொடுத்தது.
இதில் பாபரின் கட்டுப்பாடான படை, லோடியின் பெரிய படையைத் தோற்கடித்ததுடன் இப்ராகிம் லோடியும் இப்போரில் கொல்லப்பட்டார்.
இந்த வெற்றியானது டெல்லி சுல்தானகத்தின் முடிவிற்கும், இந்தியாவில் முகலாயப் பேரரசு நிறுவப்படுவதற்கும் வழிவகுத்தது.