TNPSC Thervupettagam

முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் – 2025

July 3 , 2025 2 days 62 0
  • தமிழக அரசானது, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த உள்ளது.
  • இதன் மூலம், இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
  • K. காமராஜின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஜூலை 15 ஆம் தேதியன்று இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் தொடங்கப்படும்.
  • தொடக்கக் கல்வி இயக்குநரகம் ஆனது பெரும்பாலும் நகர்ப்புற உதவி பெறும் பள்ளிகளை உள்ளடக்கிய சுமார் 1,416 பள்ளிகளை இந்தத் திட்டத்தில் சேர்ப்பதற்காகப் பட்டியலிட்டுள்ளது.
  • தற்போது, ​​34,987 பள்ளிகளில் 17.53 லட்சம் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள்.
  • இந்தத் திட்டமானது, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப் பட்டது.
  • 2024–25 ஆம் கல்வியாண்டில், கிராமப் புறத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்