முன்னாள் படைவீரர்கள் (மத்திய குடிமைபணிகள் மற்றும் பதவிகளில் மறு வேலை வாய்ப்பு) விதிகள், 2026 ஐ இந்திய அரசு திருத்தியது என்பதோடுஇதன் மூலம் முன்னாள் படைவீரர்களின் வரையறையின் கீழ் ராணுவ செவிலியர் சேவையின் பணியாளர்களையும் சேர்த்துள்ளது.
இந்தத் திருத்தம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 309 இன் கீழ் அறிவிக்கப்பட்டது.
இராணுவச் செவிலியர் சேவை (MNS) அதிகாரிகளின் மறு வேலைவாய்ப்பு சலுகைகள் குறித்த முந்தைய குழப்பத்தை இது நீக்குகிறது.
MNS வீரர்கள் இப்போது குரூப் C பதவிகளில் 10% இட ஒதுக்கீட்டையும், மத்திய அரசின் குரூப் D பதவிகளில் 20% இடஒதுக்கீட்டையும் பெற தகுதியுடையவர்கள்.
அவர்கள் தங்கள் ராணுவச் சேவை ஆண்டுகளுடன் கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு சமமான வயது தளர்வையும் பெறுவார்கள்.