TNPSC Thervupettagam

முப்படையின் தலைமைத் தளபதி

December 31 , 2019 1998 days 1209 0
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று, இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக (Chief of Defence Staff CDS) நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை முதலாவது CDS ஆகப் பணியாற்றுவார்.
  • இவர் சமீபத்தில் இராணுவத் தளபதியாக ஓய்வு பெற்றார். இவருக்குப் பதிலாக ஜெனரல் மனோஜ் முகுந்த் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • அண்மையில், மத்திய அமைச்சரவையானது 3 ஆண்டு கால பதவிக் காலத்துடன் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட முப்படையின் தலைமைத் தளபதி பதவியினை உருவாக்கிட ஒப்புதல் அளித்தது.
  • CDSன் ஊதியம் மற்றும் சலுகைகள் மற்ற ராணுவச் சேவைகளின் தலைவருக்குச் சமமானதாகும்.
  • CDS பதவியில் உள்ளவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் உருவாக்கப்படவுள்ள இராணுவ விவகாரத் துறைக்கும் தலைமை தாங்க இருக்கின்றார்.
  • இவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் இராணுவ ஆலோசகராகவும் செயல்பட இருக்கின்றார்.

CDS பற்றி

  • உலக நாடுகளில் இத்தாலி, பிரான்சு, சீனா, ஸ்பெயின், இங்கிலாந்து, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முப்படையின் தலைமைத் தளபதியைக் கொண்டிருக்கும் மற்ற நாடுகளாகும்.
  • 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட கார்கில் போரைத் தொடர்ந்து, சுப்பிரமணியம் தலைமையிலான கார்கில் சீராய்வுக் குழுவின் பரிந்துரைகள் மூலம் இது அதிகாரப் பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டது.

நான்கு நட்சத்திர அந்தஸ்து

  • இந்தியாவில் நான்கு நட்சத்திர அந்தஸ்தானது 5 அதிகாரிகளுக்கு வழங்கப் படுகின்றது.
  • இதில் இந்தியக் கடற்படைத் தலைவர், இந்திய விமானப் படையின் தலைவர், இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி மற்றும் புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஆகியோர் அடங்குவர்.
  • https://www.tnpscthervupettagam.com/currentaffairs-detail/creation-of-a-chief-of-defence-staff/chief

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்