நுகர்வோர் விவகாரத் துறையானது, இயங்கலை வழி விற்பனையாளர்களை இணைய வணிக தளங்களில் 'டார்க் பேட்டர்ன் ட்ரிப் ப்ரைசிங்' எனும் நெறிமுறை சாரா விளம்பரத்திற்குப் பிறகு முழு விலையை வெளிப்படுத்துதல் குறித்து எச்சரித்துள்ளது.
சேவை அல்லது வசதிக் கட்டணங்கள் போன்ற மறைமுகக் கட்டணங்கள் பணம் செலுத்துதலில் சேர்க்கப்படும் போது விளம்பரத்திற்குப் பிறகு அசல் விலையை வெளிப்படுத்துதல் சூழல் ஏற்படுகிறது.
நுகர்வோர் இது போன்ற நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை 1915 என்ற தேசிய நுகர்வோர் உதவி (NCH) எண்ணை அழைப்பதன் மூலம் தெரிவிக்கலாம்.
2025 ஆம் ஆண்டு இயங்கலை வழி தீபாவளி விற்பனையில் சாதனை பதிவானதையும், விரைவான வர்த்தகப் பரிவர்த்தனைகளில் கூர்மையான அதிகரிப்பையும் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யூனிகாமர்ஸ் நிருவனத்தின் கூற்றுப் படி, பண்டிகை காலத்தில் இந்தியாவின் இயங் கலை வழி சில்லறை ஆர்டர்கள் ஆண்டிற்கு 24% வளர்ச்சியடைந்தன.