TNPSC Thervupettagam

மூன்றாம் தரப்புக் காப்பீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

August 11 , 2026 2 days 46 0
  • புதிய வாகனங்களுக்கான கட்டாய மூன்றாம் தரப்பு மோட்டார் வாகனக் காப்பீட்டு கால அளவை உச்ச நீதிமன்றம் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.
  • இதன் மூலம், புதிய கார்களுக்கு இனி நான்கு ஆண்டுகளுக்கும், இருசக்கர வாகனங்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கும் காப்பீட்டுப் பாதுகாப்பு கிடைக்கும்.
  • சட்டரீதியான கட்டாயம் இருந்தபோதிலும், அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கையிலான வாகனங்கள் மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாமலேயே இந்தியச் சாலைகளில் இயக்கப் படுவதை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
  • இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இழப்பீடு பெறுவதற்குப் பல்வேறு இடங்களுக்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • செல்லுபடியாகும் காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்குவதை மறுக்கும் வகையிலான ஒரு நடைமுறையை நீதிமன்றம் முன்மொழிந்தது.
  • மேலும், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள 'தானியங்கி வாகன எண் பலகை கண்டறியும் ஒளிப்படக்கருவிகளை' (ANPR), 'இந்தியக் காப்பீட்டுத் தகவல் பணியகம்' (IIB) பராமரிக்கும் காப்பீட்டுத் தரவுகள் மற்றும் 'வாகன்' (VAHAN) இணையதளத்தில் உள்ள வாகனப் பதிவுத் தரவுகளுடன் இணைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • 'எஸ். ராஜசேகரன் Vs இந்திய அரசு' வழக்கில் 2018-இல் வழங்கப்பட்ட தீர்ப்பில், புதிய வாகனங்களை வாங்குபவர்கள், அவற்றை வாங்கும்போதோ அல்லது பதிவு செய்யும் போதோ கார்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கும் மூன்றாம் தரப்பு காப்பீட்டைப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்