மெய்நிகர் நுண்ணறிவுக் கூறு – தேஜாஸ்
February 4 , 2021
1629 days
645
- தேசியத் தகவல் மையச் சேவைகள் அமைப்பானது (National Informatics Centre Services Inc - NICSI) தனது 25வது ஆண்டு நிறுவன தினத்தைக் கொண்டாடியது.
- இந்த நிகழ்வில், ஒரு மெய்நிகர் நுண்ணறிவுக் கூறான ”தேஜாஸ்” ஆனது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
- இது தரவு தளத்திலிருந்து முக்கியமான தகவல்களைப் பிரித்தெடுக்க இருக்கின்றது.
- இது அரசுச் சேவைகளின் திறன்கள் மற்றும் கொள்கை முடிவுகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு உதவ இருக்கின்றது.
- மேலும் ”எங்கிருந்தும் பணியாற்றுதல்” என்ற தளமானது தேஜாஸ் உடன் இணைந்து தொடங்கப் பட்டுள்ளது.
- இந்தத் தளமானது பணியாளர்கள் எந்தவொரு இடத்திலிருந்தும் மின்னஞ்சல், மின்னணு-அலுவலகம், நாள்காட்டி மற்றும் இதர துறைசார் செயலிகளை அணுக வழிவகை செய்கின்றது.
- NICSI ஆனது தேசியத் தகவல் மையத்தின் கீழ் செயல்படுகின்றது.

Post Views:
645