உலகின் வேகமாக வளரும் முதிர்நிலைத் தொழில்நுட்பச் சூழலமைப்பு
February 4 , 2021
1629 days
621
- பெங்களூரு நகரமானது 2016 ஆம் ஆண்டு முதல் உலகில் வேகமாக வளரும் முதிர்நிலைத் தொழில்நுட்பச் சூழலமைப்பு கொண்ட நகரமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளது.
- இந்த அறிக்கையானது இலண்டன் & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.
- இது தரவரிசையைக் கணக்கிடுவதற்காக Dealroom.co என்ற நிறுவனத்திடமிருந்த தரவை ஆய்வு செய்துள்ளது.
- இந்தப் பட்டியலில் இலண்டன் நகரம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
- இதில் முனிச், பெர்லின், பாரிஸ் ஆகிய நகரங்கள் முறையே 3வது, 4வது, 5வது இடங்களைப் பிடித்துள்ளது.
- இதில் மும்பை நகரம் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
- மேலும் பெங்களூரு நகரமானது உலகில் தொழில்நுட்ப துணிகர முதலீட்டிற்கான (venture capitalist - VC) பிரிவில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
- ஷாங்காய் நகரமானது இந்த உலகப் பட்டியலில் VC பிரிவில் முதலிடத்தைப் பிடித்து உள்ளது.

Post Views:
621