72வது குடியரசு தின அணிவகுப்பின் தனித்துவமான அம்சங்கள்
February 3 , 2021
1630 days
836
- இந்தியாவின் 72வது குடியரசு நாள் அணிவகுப்பானது ஐந்து தசாப்தங்களில் முதல் முறையாக சிறப்பு விருந்தினர் யாரும் இல்லாமல் நடைபெற்றுள்ளது.
- அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் உள்ள துருப்புக்கள் இந்தியாவின் முதல் பெண் போர் விமானியுடன் பங்கேற்றன.
- ஒன்றியப் பிரதேசமான லடாக்கின் புதிதாக உருவாக்கப்பட்ட ஊர்தியும் இவ்விழாவில் காட்சிப் படுத்தப் பட்டது.
- புதிதாக வாங்கிய ரஃபேல் போர் விமானங்களும் இராஜபாதை மீது பறந்தன.
- முன்னாள் ராணுவ வீரர்களின் பங்கேற்பும், மோட்டார் சைக்கிள் சாகசங்களும் இதில் இடம் பெறவில்லை.
- அணிவகுப்பின் பாதையும் தேசிய அரங்கம் வரை குறைக்கப்பட்டது.
- அணிவகுப்பு அணிகளின் அளவு வழக்கமான 144 என்ற அளவிலிருந்து 96 ஆக குறைக்கப் பட்டது.
- பார்வையாளர்களின் எண்ணிக்கை 25,000 ஆக குறைக்கப்பட்டது.
- அணிவகுப்பில் முதல் முறையாக 122 உறுப்பினர்களைக் கொண்ட வங்கதேசத்தின் குழு ஒன்று பங்கேற்றது.
Post Views:
836