TNPSC Thervupettagam

தேசிய தொற்றா நோய்களுக்கான கண்காணிப்பு ஆய்வு

February 3 , 2021 1632 days 690 0
  • இது சமீபத்தில் இந்தியாவில் சுகாதார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டது.
  • 2017-18 ஆம் ஆண்டிற்கான காலகட்டத்தில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • இது தொற்றா நோய்கள் குறித்த முதலாவது விரிவான ஒரு கணக்கெடுப்பாகும்.
  • இந்தக் கணக்கெடுப்பானது 15-69 வயதுடைய நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கியது ஆகும்.

முக்கியக் கண்டுபிடிப்புகள்

  • இந்தியாவில் ஐந்து பெரியவர்களுள் இருவர் தொற்றா நோய்களுக்கான மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆபத்துக் காரணிகளைக் கொண்டுள்ளனர்.
  • நான்கு பெரியவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களும் 6.2% இளம் பருவத்தினரும் அதிக எடை அல்லது பருமன் கொண்டுள்ளனர்.
  • பத்து பேரில் மூன்று பேர் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளனர்.
  • 3 சதவீத பேர் அதிக இரத்த குளுக்கோஸ் அளவைக் கொண்டுள்ளனர்.
  • ஒவ்வொரு மூன்று பெரியவர்களுள் ஒருவர் மற்றும் நான்கில் ஒரு பங்கு ஆண்கள் கடந்த 12 மாதங்களில் புகையிலை நுகர்வு மற்றும் மது ஆகியவற்றை உட்கொண்டு உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்