840 Sqn (CG) எனப்படும் இந்திய கடலோரக் காவல்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரான (ALH) Mk-III என்ற படைப் பிரிவானது சமீபத்தில் அந்தப் படையில் இணைக்கப் பட்டது.
Mk-III மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
இது தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஆபத்துக்கு உள்ளாகக் கூடியப் பகுதிகள் நிறைந்த நீர்நிலைகளில் இந்தியக் கடலோரக் காவல் படையின் செயல்திறன்களுக்கு ஒரு பெரிய உத்வேகத்தினை வழங்கும்.