இந்தியத் தலைமை நீதிபதி D.Y. சந்திரசூட் அவர்கள், ஹிமா கோஹ்லி மற்றும் பேலா M. திரிவேதி ஆகிய நீதிபதிகள் அடங்கிய ஒரு அனைத்து மகளிர் நீதிமன்ற அமர்வினை அமைத்துள்ளார்.
இந்த அமர்வானது திருமணம் சார்ந்தப் பிரச்சினைகள் மற்றும் பிணை தொடர்பான விவகாரங்கள் ஆகியவற்றோடுத் தொடர்புடைய இடமாற்ற மனுக்களை விசாரிக்கும்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் அனைத்து மகளிர் அமர்வு அமைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய முதல் அனைத்து மகளிர் அமர்வானது 2013 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
2வது அமர்வானது 2018 ஆம் ஆண்டில் நீதிபதிகள் R. பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வாகும்.
2020 ஆம் ஆண்டில், மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹி அதன் முதல் மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அளவிலான அனைத்து மகளிர் அமர்வினை அமைத்தார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கோஹ்லி, B.V. நாகரத்னா மற்றும் நீதிபதி திரிவேதி உட்பட மூன்று பெண் நீதிபதிகள் உள்ளனர்.
நீதிபதி நாகரத்னா அவர்கள் 2027 ஆம் ஆண்டில் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 27 நீதிபதிகள் உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையானது 34 ஆகும்.