பீகாரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட டூயர்ஸ் ராணி (Dooars Rani) என்ற மூன்ற வயதுப் பெண் புலி, ரைமோனா தேசிய பூங்காவிற்கு (அசாம்) அருகே பிடிக்கப்பட்டு பக்சா புலிகள் காப்பகத்திற்கு (Buxa Tiger Reserve) திரும்பக் கொண்டுவரப்பட்டது.
புலிகள் மற்றும் அவற்றின் வாழிடங்களைப் பாதுகாப்பதற்காக 1973 ஆம் ஆண்டில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' (Project Tiger) தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் 1983 ஆம் ஆண்டில் பக்சா புலிகள் காப்பகம் (மேற்கு வங்கம்) நிறுவப்பட்டது.
வாழ்விடச் சீரழிவு, வனத் துண்டாக்கம் மற்றும் இரையின் இருப்பு குறைதல் ஆகிய காரணங்களால் பக்சா காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை குறைந்தது.
தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆகியவற்றின் ஆதரவுடன் 2018 ஆம் ஆண்டு முதல் 'புலிகள் பெருக்குதல் மற்றும் மீட்புத் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று, டூயர்ஸ் ராணி (T-138) வால்மீகி புலிகள் காப்பகத்திலிருந்து (பீகார்) இடமாற்றம் செய்யப்பட்டு பக்சா புலிகள் காப்பகத்தில் விடுவிக்கப்பட்டது.
அக்டோபர் 25 அன்று, டூயர்ஸ் ராணி ரைமோனா தேசியப் பூங்காவிற்குள் நுழைந்தது, அங்கு வனத்துறை அதிகாரிகளால் பிடிபட்டு மீண்டும் பக்சா புலிகள் காப்பகத்திற்கு அதனைக் கொண்டு வந்தனர்.
இந்த மீட்புத் திட்டமானது, நிலையான புலிகள் எண்ணிக்கையை மீட்டெடுக்க வாழ்விட மேம்பாடு, இரையின் அளவை அதிகரித்தல் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.