அண்டார்டிகாவில் மைத்ரி II எனும் இந்தியாவின் நான்காவது ஆராய்ச்சி நிலையத்தினைக் கட்டமைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கிழக்கு அண்டார்டிகாவில் அமைக்கப்பட உள்ள மைத்ரி II ஆனது 2029 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைத்ரி II மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைச் சூழல்கள் மற்றும் இந்தியாவிற்கு தரவை அனுப்ப தானியங்கி அறிவியல் கருவிகளைக் கொண்டிருக்கும்.
இந்தியாவின் இரண்டாவது அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையமான மைத்ரி 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இந்தியாவின் முதல் அறிவியல் ஆராய்ச்சி நிலையமான தக்சின் கங்கோத்ரி 1990 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது.