யாத்ரீகர்களுக்கான அரசு விருப்புரிமை அடிப்படையிலான ஹஜ் ஒதுக்கீடு
January 17 , 2023 944 days 370 0
யாத்ரீகர்களுக்கான அரசு விருப்புரிமை அடிப்படையிலான ஹஜ் ஒதுக்கீட்டினை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது.
ஹஜ் யாத்திரை என்பது சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஒரு இஸ்லாமிய யாத்திரையாகும்.
சவூதி அரேபிய அரசானது, ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்துப் பயணம் மேற்கொள்கின்ற யாத்ரீகர்களின் மொத்த எண்ணிக்கையை நிர்ணயிக்கும் வகையில் நாடு வாரியான ஒதுக்கீட்டை வழங்குகிறது.
"அரசு விருப்புரிமை ஒதுக்கீடு" ஆனது மேலும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் 200 இடங்கள் ஹஜ் குழுவிடமும், 300 இடங்கள் மத்திய அரசில் முக்கியமான பதவிகளைக் கொண்டுள்ளவர்களிடமும் உள்ளன.
இதில் குடியரசுத் தலைவரிடம் 100, பிரதமரிடம் 75, குடியரசுத் துணைத் தலைவரிடம் 75, சிறுபான்மை விவகார அமைச்சரிடம் 50 ஆகியவை அடங்கும்.
இந்த இடங்கள் தற்போது மீண்டும் பொதுக் குழுவில் சேர்க்கப்பட்டதன் மூலம் இந்த ஒதுக்கீடானது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா சவூதி அரேபியாவுடனான 2023 ஆம் ஆண்டு ஹஜ் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, மொத்தம் 1,75,025 இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும்.
இது வரலாற்றில் மிக உயர்மதிப்பு கொண்டதாகக் கருதப் படுகிறது.