யுனெஸ்கோ மகத்தான கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியல் 2025 - தங்காயில் சேலை
December 13 , 2025 14 hrs 0 min 45 0
வங்காளதேசத்தின் தங்காயில் என்ற நெசவு செய்யப் பட்ட சேலை 20வது குழு அமர்வின் போது யுனெஸ்கோவின் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப் பட்டது.
இந்த அங்கீகாரம், சிறப்பான கைத்தறி வேலைப்பாட்டிற்குப் பெயர் பெற்ற தங்காயில் மாவட்டத்தின் இரண்டு நூற்றாண்டு பழமையான நெசவுப் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டுகிறது.
மேற்கு வங்காளத்தில் புலம்பெயர்ந்த நெசவாளர்கள் நீண்டகாலமாக இந்த சேலையை உற்பத்தி செய்வதைக் காரணம் காட்டி, 2024 ஆம் ஆண்டில் இந்தியா "வங்காளத்தின் தங்காயில் சேலைக்கு" புவிசார் குறியீடு வழங்கியது.
சர்வதேச உடன்படிக்கையில் இந்த இரு நாடுகளும் பங்குதாரர்களாக இருப்பதால், யுனெஸ்கோ அங்கீகாரமும் இந்தியாவின் புவிசார் குறியீடும் ஒன்றோடொன்று முரண் படவில்லை என்று வங்காளதேசம் கூறியது.