TNPSC Thervupettagam

யூரேசிய நீர்நாய் – காஷ்மீர்

June 17 , 2025 17 days 70 0
  • லிடர் நதியில் யூரேசிய நீர்நாய் மீண்டும் தென்பட்டுள்ளது.
  • இது கடந்த 30 ஆண்டுகளாக காஷ்மீரில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது.
  • இந்தப் பகுதியளவு நீர் வாழ் வகைபாலூட்டியானது உள்ளூரில் வுடர் என்று அழைக்கப் படுகிறது.
  • இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தினால் (IUCN) 'அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாக' வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இப்பழைய தரவுகள் ஆனது, தச்சிகம் தேசியப் பூங்கா மற்றும் தால் ஏரிக்கு நீரளிக்கும் நீரோடைகள் போன்ற பகுதிகளில் அதன் எண்ணிக்கையைக் குறிப்பிடப் படுகிறது.
  • நீர் மாசுபாடு மற்றும் அதன் ரோமங்களுக்காக அதனை வேட்டையாடுதல் காரணமாக அதன் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது.
  • ஒரு மாமிசம் உண்ணும் பாலூட்டியாக, இது மீன் மற்றும் பிற நீர்வாழ் விலங்கு இனங்களை உண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • அவை வாழ்வதற்குத் தூய்மையான நீர் மற்றும் ஏராளமான இரை தேவைப்படுகிறது என்பதால், நீர்நாய்களின் இருப்பு ஆனது ஒரு மிகச் சீரான சுற்றுச்சூழல் அமைப்பைக் குறிக்கிறது.
  • இந்தியாவில், இது மிக முதன்மையாக வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும், தெற்குப் பகுதிகளிலும் காணப்படுகிறது.
  • இந்தியாவில், 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இரண்டாம் அட்டவணையில் இது வகைப்படுத்தப் பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.
  • கூடுதலாக இது அருகி வரும் உயிரினங்களின் மீதான சர்வதேச வர்த்தகத்தினை நன்கு ஒழுங்குபடுத்தச் செய்கின்ற, CITES உடன்படிக்கையின் முதலாவது பின் இணைப்பில் பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்