TNPSC Thervupettagam

ரஃபேல் ஒப்பந்தம் குறித்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு

November 15 , 2019 2092 days 676 0
  • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதை ஆதரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.
  • இந்த அமர்வானது இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான (Chief Justice of India - CJI) ரஞ்சன் கோகாயால் தலைமை தாங்கப்பட்டது.
  • “யஷ்வந்த் சின்ஹா மற்றும் பிறர் (எதிர்) மத்தியப் புலனாய்வு அமைப்பு" என்ற வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • CJI உடன் இணைந்து நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் இத்தீர்ப்பை எழுதி, வழங்கினார்.
  • இந்த அமர்வின் மூன்றாவது நீதிபதியான கே.எம். ஜோசப் முதன்மைத் தீர்ப்புடன் ஒத்துப் போவதாக தீர்ப்பு கூறினார். மேலும் இவர் அப்புகாரில் ஏதேனும் முகாந்திரம் இருந்தால் முன் அனுமதியுடன் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்