TNPSC Thervupettagam

ரஃபேல் ஒப்பந்தம்

October 9 , 2019 2126 days 753 0
  • 08.10.19 அன்று இந்தியா தனது முதலாவது பிரெஞ்சுத் தயாரிப்பு ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றது.
  • பாகிஸ்தான் மற்றும் சீனாவைப் பொறுத்த வரையில் இது இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாகக் கருதப் படுகின்றது.
  • இந்த விமானமானது (இந்தியாவினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட 36 விமானங்களில் முதலாவது விமானம்) பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கால் பெற்றுக் கொள்ளப்பட்டது.
  • மேலும், இந்திய விமானப் படையானது (Indian Air Force - IAF) தனது 87வது தொடக்க தினத்தையும் இதே நாளில் கொண்டாடியது.
  • பிரான்ஸ், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ரஃபேல் விமானத்தைப் பயன்படுத்தும் நான்காவது நாடு இந்தியா ஆகும்.
  • ரஃபேல் விமானத்தின் சேர்க்கையானது  IAFற்கு மிக முக்கியமானதாகக் கருதப் படுகின்றது.   IAF ஆனது மிக் -21 என்ற பைசன் ரக விமானத்தைப் பணியில் இருந்து நீக்குவதற்குத்  தயாராகி வருகின்றது.
  • ரஃபேல் விமானத்தின் தயாரிப்பாளர் பிரெஞ்சு விமான நிறுவனமான  டசால்ட் நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்