TNPSC Thervupettagam

ரக்‌ஷா (RAKSHA) – பாதுகாப்பு ராஜதந்திர கட்டமைப்பு

September 6 , 2026 7 days 66 0
  • இந்தியாவின் பாதுகாப்பு ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய உத்திசார் கூட்டாண்மைகளுக்கான 10 ஆண்டு கட்டமைப்பான 'ரக்‌ஷா'-வை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று வெளியிட்டார்.
  • ரக்‌ஷா என்பது இந்தியாவின் இருதரப்பு மற்றும் பலதரப்பு பாதுகாப்புக் கூட்டாண்மைகள், இராணுவ ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய பாதுகாப்பு ஈடுபாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது நட்பு நாடுகளுடன் கூட்டுப் பயிற்சிகள், பயிற்சி, இராணுவக் கல்வி, தொழில் முறைப் பரிமாற்றங்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் கூட்டு மேம்பாடு, கூட்டு உற்பத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பாதுகாப்புத் தொழில் துறை ஒத்துழைப்பை இந்தக் கட்டமைப்பு ஊக்குவிக்கிறது.
  • இந்திய பாதுகாப்பு ஏற்றுமதிகளை மேம்படுத்துவதையும், நம்பகமான உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி பங்குதாரராக இந்தியாவை நிலை நிறுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்