TNPSC Thervupettagam

ரயில் நிலையங்களில் “தூய்மை” குறித்த ஆய்வு அறிக்கை

October 2 , 2019 2134 days 667 0
  • ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் “ரயில் நிலையங்களில் தூய்மை குறித்த ஆய்வு அறிக்கை” (புறநகர் மற்றும் புறநகர் அல்லாத ரயில் நிலையங்களின் தூய்மை குறித்த ஆய்வு 2019) என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • இந்த ஆய்வு 1000 மதிப்பெண்களைக் கொண்டதாக ஒரு மூன்றாம் தரப்பு தணிக்கையாக ரயில்துறை நடத்தி இருக்கின்றது. தூய்மை மீதான தரவரிசைப் படுத்தலானது 720 ரயில் நிலையங்களில் நடத்தப்பட்டது.
  • இந்த ஆய்வில் புறநகர் ரயில் நிலையங்களும் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளன.
  • ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் துர்காபுரா ஆகியவை முதல் மூன்று தூய்மையான ரயில் நிலையங்களாகும். இந்த 3 நிலையங்களும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளன.
  • முதல் மூன்று ரயில்வே மண்டலங்கள்: வடமேற்கு ரயில்வே, தென்கிழக்கு மத்திய ரயில்வே மற்றும் கிழக்கு மத்திய ரயில்வே.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்