TNPSC Thervupettagam

ராஜீவ் காந்தி கொலையாளிகள் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

November 13 , 2022 977 days 394 0
  • நவம்பர்  11 அன்று உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப் பட்ட ஆறு குற்றவாளிகளையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.
  • அவர்கள் ராஜுவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தணடனையை அனுபவித்து வந்தனர்.
  • அந்த ஆறு குற்றவாளிகள் நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், சுதந்திர ராஜா என்கிற சாந்தன், முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோராவர்.
  • அந்த நபர்களின் நடத்தை சிறையில் நன்கு இருந்ததாகவும் மேலும் அவர்கள் நீண்ட நாட்கள் சிறையில் உள்ளதாகவும் கூறிய, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களின் மனுவினை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்தத் தீர்ப்பானது, நியமனம் செய்யப் பட்ட ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசாங்கத்தின்  முடிவுகளோடு மாறுபடக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றது.
  • 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அரசியலமைப்பு விதி 161 என்பதின் கீழ் தமிழ்நாடு மாநில அமைச்சரவையானது அவர்களை தங்களின் தண்டனைக் காலத்திற்கு முன்கூட்டியே அவர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்தது என்பதை BR கவாய் மற்றும் BV நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வானது கோடிட்டுக் காட்டியது.
  • ஆனால் அதன் மீது முடிவெடுக்க வேண்டிய ஆளுநர் அந்தக் கோப்புகளை மத்திய அரசிற்கு அனுப்பி வைத்து விட்டார்,
  • இந்தக் கொலை வழக்கில் ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவிற்குக் கட்டுப்பட்டவர் ஏனெனில் தற்போது காலாவதியாகி விட்ட பயங்கரவாதம் மற்றும் சீர்குலைப்பு (தடுப்பு) சட்டத்தால் வழங்கப்பட்ட அவர்களின் தண்டனைகள் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப் பட்டு விட்டன.
  • அந்த அமர்வு அவர்களின் முன்னாள் சக குற்றவாளி பேரறிவாளன் வழக்கினை இதனுடன் ஒப்பிட்டுக் காட்டியது.
  • 2022 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதியன்று, நீதியினை முழுமையாக பெறச் செய்வதற்கு வேண்டி அரசியலமைப்பின் விதி 142 என்பதின் கீழ் தனது அசாதாரண அதிகாரத்தின் பயன்பாட்டின் கீழ் உச்ச நீதிமன்றத்தால் தண்டனை முடியும் காலத்திற்கு முன்பான முன்கூட்டிய விடுதலை அவருக்கு வழங்கப் பட்டது.
  • அந்த மே மாதத் தீர்ப்பானது இந்த வழக்கில் நிவாரணத்தினைப் பரிந்துரை செய்வதற்கான ஒரு தனித்துவ அதிகாரமானது தமிழக மாநில அரசிற்கு மட்டுமே உள்ளதேயன்றி ஒன்றிய அரசிற்குக் கிடையாது என்று முடிவு செய்து இருந்தது.
  • இந்த வழக்கில் பயங்கரவாதம் மற்றும் சீர்குலைப்பு (தடுப்பு) சட்டம் அல்லது தடா சட்ட விசாரணை நீதிமன்றம் ஆரம்பத்தில் 26 நபர்களுக்கு மரண தண்டனையை விதித்து இருந்தது.
  • 1999 ஆம் ஆண்டில், நிறைவேற்றப் பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு தடா சட்டம் காலாவதியாக அனுமதிக்கப் பட்ட பிறகு, உச்ச நீதிமன்றமானது அவர்களில் ஏழு பேரின் தண்டனையினை மட்டும் உறுதி செய்து விட்டு, எஞ்சியிருந்த நபர்களின் தண்டனையினை ரத்து செய்து விட்டது.
  • அந்த கொலையினைச் செய்த ஒரு தனி அணியினரின் ஒரு மையப் பகுதியாக தண்டிக்கப் பட்ட ஒருவரும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்