ராய் புயலானது பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்குப் பகுதியைத் தாக்கியதால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும்பகுதியில் வசித்த ஆயிரக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர்.
ராய் புயலானது 2021 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய 15வது பெரிய வானிலை சார்ந்த இடர் (15th major weather disturbance) ஆகும்.
இது வேகமாக தீவிரமடைந்து மணிக்கு 120 மைல் வேகத்தில் நிலையான காற்றுடன் வீசியதால் ஒரு அதி தீவிரப் புயல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகைப்பாடானது அமெரிக்காவின் 5 ஆம் வகை புயலைப் போன்றது.
ராய் புயலானது பிலிப்பைன்ஸ் நாட்டில் ஓடெட் புயல் எனவும் அழைக்கப்படுகிறது.