TNPSC Thervupettagam

ராய்ப்பூரின் மழைநீர் சேகரிப்புப் புரட்சி

June 3 , 2026 10 days 65 0
  • சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூர், ஜல் சஞ்சய் ஜன் பகிதாரி (JSJB) முன்னெடுப்பின் கீழ் நகர்ப்புற நீர்ப் பாதுகாப்பிற்கான ஒரு தேசிய முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது.
  • செறிவூட்டல் கிணறுகள், கசிவுநீர்க் குட்டைகள் மற்றும் மேற்கூரை மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உட்பட சுமார் 32,000 மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • நிலத்தடி நீர் செறிவூட்டலை மேம்படுத்துதல், நகர்ப்புற நீர் அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் ராய்ப்பூரை பருவநிலை-எதிர்ப்பு திறன் கொண்ட ஸ்பாஞ்ச் நகரமாக மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • செறிவூட்டல் கிணறுகளானது ஆண்டுக்கு 3 லட்சம் லிட்டர் நீரையும், ஊசி கிணறுகள் ஆண்டுக்கு 15 லட்சம் லிட்டர் நீரையும் செறிவூட்ட முடியும்.
  • நிலையான நகர்ப்புற நீர் மேலாண்மைக்காக, குளங்களை இணைத்தல், காரூண் நதிநீர் செறிவூட்டல் திட்டம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுபயன்பாடு செய்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்