புனேயில் உள்ள இராணுவ விளையாட்டு மையத்திற்கு (ASI - Army Sports Institute)2020 ஆம் ஆண்டின் ராஷ்டிரிய கேல் புரோட்டோசஹன் புரஸ்கர் என்ற விருதானது வழங்கப் பட்டுள்ளது.
ASI ஆனது 2001 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று இந்திய இராணுவத்தின் ஒலிம்பிக்ஸ் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்படுத்தப் பட்டது.
இது ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் வில்வித்தை, தடகளம், குத்துச் சண்டை, நீரில் மூழ்குதல், தற்காப்பு, பளு தூக்குதல் மற்றும் மல்யுத்தம் போன்ற தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 7 பிரிவுகளில் இராணுவத்தில் உள்ள திறமை வாய்ந்த வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.