இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025–26 ஆம் நிதியாண்டிற்காக மத்திய அரசுக்கு இதுவரை இல்லாத அளவில் ₹2.86 லட்சம் கோடி உபரி நிதியை மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பையில் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய இயக்குநர்களின் 623-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டது.
2026 ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் மொத்த வருமானம் 26.42% அதிகரித்துள்ள அதே நேரத்தில் அதன் இருப்புநிலைக் குறிப்பு 20.61% விரிவடைந்து ₹91.97 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
திருத்தப்பட்ட பொருளாதார மூலதனக் கட்டமைப்பின் (ECF) கீழ், அவசரகால இடர் சேமிப்பை (CRB) 6.5% ஆக பராமரிக்கும் அதே வேளையில், மத்திய வங்கி ₹1.09 லட்சம் கோடியை இந்த இடர் சேமிப்பிற்கு மாற்றியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்ததுடன், பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கான அபாயங்கள் குறித்தும் விவாதித்தது.