TNPSC Thervupettagam

IBCAவில் சவூதி அரேபியா

May 26 , 2026 4 days 64 0
  • சவூதி அரேபியா சர்வதேசப் பெரும் பூனை இனங்கள் கூட்டணியின் (IBCA) 26-வது உறுப்பு நாடாக மாறியுள்ளது.
  • IBCA என்பது சிங்கம், புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை, சிவிங்கிப்புலி, ஜாகுவார் மற்றும் பூமா ஆகிய ஏழு பெரும் பூனை இனங்களைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய தளமாகும்.
  • பெரும் பூனை இனங்களைப் பாதுகாப்பதற்கான பல நாடுகள் மற்றும் பல அமைப்புகளின் கூட்டமைப்பாக 2024-ஆம் ஆண்டில் இக்கூட்டணி நிறுவப்பட்டது.
  • வனவிலங்கு பாதுகாப்பை ஆதரிக்கும் 95 பெரும் பூனை இனங்கள் வாழும் நாடுகள், அவை வாழாத நாடுகள், அறிவியல் அமைப்புகள் மற்றும் நிறுவனப் பங்கீட்டாளர்கள் இக்கூட்டணியில் அடங்குவர்.
  • பெரும் பூனை இனங்களுக்கான சர்வதேச ஒத்துழைப்பு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வெற்றிகரமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பகிர்வதை இந்தக் கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்