அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தூதரகம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா 2026 ஆம் ஆண்டிற்கான ரைசினா அறிவியல் தூதரக முன்னெடுப்பை (RSDI) தொடங்கியுள்ளது.
புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் குறித்த இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடலில் அறிவியல் ராஜதந்திரத்தை ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
RSDI, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஆளுகை, ஆராய்ச்சிப் பாதுகாப்பு, தொழில் நுட்பக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் உலகளாவியத் தரநிலைகளில் சமமான பங்கேற்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் இது கவனம் செலுத்துகிறது.
இந்தத் தளமானது, முழுமையான அமர்வுகள் மற்றும் நிபுணர்களின் வட்டமேசை கூட்டங்கள் மூலம் அறிவியலாளர்கள், தூதர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் துறைத் தலைவர்களை ஈடுபடுத்தும்.
இந்த முன்னெடுப்பு, 2026 ஆம் ஆண்டு மார்ச் 5 முதல் 7 ஆம் தேதி வரை புது தில்லியில் நடைபெறும் ரைசினா உரையாடலுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.
இது, உலகளாவிய அறிவியல்சார் தூதரக உறவில், குறிப்பாக உலகத்தின் தெற்கு நாடுகளுக்காக, இந்தியாவின் பங்கை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.