TNPSC Thervupettagam

லடாக் மாக்மா வளைவு – புவித்தட்டு பரிணாமம்

March 26 , 2026 15 hrs 0 min 53 0
  • அறிவியலாளர்கள் சமீபத்தில் விளக்கியுள்ள லடாக் மாக்மா வளைவின் பரிணாமம் ஆனது, கிட்டத்தட்ட 130 மில்லியன் ஆண்டுகால விரிவான புவியியல் வரலாற்றை வெளிப் படுத்துகிறது.
  • மில்லியன் கணக்கான ஆண்டுகளில் யூரேசிய தட்டிற்கு அடியில் 'நியோ-டெதிஸ்' பெருங்கடல் தட்டு தொடர்ந்து அமிழ்ந்ததால் இது உருவானது.
  • இந்த வளைவு ஜூராசிக் முதல் ஈயோசீன் காலம் வரையிலான (தோராயமாக 201 முதல் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) நீண்ட புவியியல் காலப்பகுதியில் உருவானது.
  • இந்த வளைவின் முக்கியமான புவியியல் கூறுகளில் 'டிராஸ்-நிடார் தீவு வளைவு வளாகம்' மற்றும் 'லடாக் பாத்தோலித்' (Ladakh Batholith) ஆகியவை அடங்கிய நிலையில் இவை மதிப்புமிக்க பாறை பதிவுகளைக் கொண்டுள்ளன.
  • மாக்மா பரிணாமத்தின் மூன்று முக்கிய நிலைகளைக் காட்டுகிற இந்த வளைவு மாறிவரும் புவித்தட்டு நிலைகளையும் இந்தியத் தட்டுடனான இறுதி மோதலையும் பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்