இந்திய அரசு தனது அதிகாரப்பூர்வ சர்வே ஆஃப் இந்தியா வரைபடத்தில் லடாக்கில் உள்ள 28 புவியியல் அம்சங்களின் பெயர்களை தரப்படுத்தியுள்ளது.
இந்தப் பட்டியலில் 11 சிகரங்கள், 5 மலைகள், 6 நிலப் பகுதிகள், 2 பனிப்பாறைகள், 2 கணவாய்கள், 1 பள்ளத்தாக்கு, 1 நதி, 1 ஏரி மற்றும் 1 பிற நீர்நிலைகள் ஆகியவை அடங்கும்.
புதிதாக தரப்படுத்தப்பட்ட அம்சங்களில் அதிஷா கிரி, கனிஷ்கா சிகரம், ஜோராவர் சிகரம், சிவா ரி, கருண் பிர், டிராக் கார்போ மற்றும் ஜோல்மோரி ஆகியவை அடங்கும்.
பார்பிக் மற்றும் ஸ்காம்ரி ஆகியவை பனிப்பாறைகளாகவும், சாப்சிங்கல் கணவாய் மற்றும் சாச்மிர்க் கணவாய் ஆகியவை கணவாய்களாகவும் அடையாளம் காணப் பட்டன.
ஸ்கோர்கா பள்ளத்தாக்கு, யாங்பா நதி, குரு ரின்போச்சே ஏரி மற்றும் வெந்நீர் ஊற்று ஆகியவை பிற அம்சங்களில் அடங்கும்.