“லாகி ரான்சம்வேர்” (Locky Ransomware) பற்றி CERT-In எச்சரிக்கை
September 5 , 2017 3020 days 1269 0
இந்திய கணினி அவசரகால மீட்பு நிறுவனம் (Indian Computer emergency Response Team - CERT - In) புதிதாக பரவிவரும் “லாகி” என்ற தீங்கிழைக்கும் மென்பொருள் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த லாகி மென்பொருளானது ‘ஸ்பாம்’ (Spam) என்ற தேவையற்ற மின்னஞ்சல் செய்திகளோடு சேர்த்து பரப்பப்பட்டு வருகின்றது. இது கணினிகளை தாக்கி தரமிட்டு அதனை வாடிக்கையாளர் மீட்டும்போது பணம்கேட்டு மிரட்டும்.
ரான்சம்வேர் என்பது அடிப்படையில் பணம் மிரட்டிக் கேட்டு பெறும்வரையில் கணினியின் உபயோகத்தைத் தடுக்கும் ஒரு தீங்கிழைக்கக் கூடிய மென்பொருளாகும்.
வான்னா கிரை (WannaCry) மற்றும் பெட்யா (petya) போன்ற தாக்குதல்களுக்கு அடுத்து லாகி (locky) இந்த வருடத்தின் மூன்றாவது பெரிய மென்பொருள் தாக்குதல் ஆகும். இவை அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் கணினிகள் உள்பட ஆயிரக்கணக்கான கணினிகளை முடமாக்கியது.