லாரியஸ் உலக விளையாட்டுப் போட்டிக்கான விருதுகள் 2026
April 23 , 2026 126 days 267 0
2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சிறந்த விளையாட்டுப் போட்டிகளின் சிறப்புகளைக் கௌரவிப்பதற்காக, 2026 ஆம் ஆண்டிற்கான லாரியஸ் உலக விளையாட்டுப் போட்டிக்கான விருதுகள் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்றன.
கார்லோஸ் அல்காரஸ் (டென்னிஸ்) 'சிறந்த விளையாட்டு வீரர்' விருதையும், அரினா சபலென்கா (டென்னிஸ்) 'சிறந்த விளையாட்டு வீராங்கனை' விருதையும், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (கால்பந்து கிளப்) 'சிறந்த அணி' விருதையும் வென்றன.
லாண்டோ நோரிஸ் (F1) 'இந்த ஆண்டின் சிறந்த திருப்புமுனை' வீரர் (Breakthrough of the Year) விருதையும், ரோரி மெக்லிராய் (கோல்ஃப்) 'சிறந்த மறுபிரவேசம்' (Comeback of the Year) விருதையும் வென்றனர்.
லாமைன் யமல் (கால்பந்து) 'சிறந்த இளம் விளையாட்டு வீரர்' விருதையும், சோலி கிம் (ஸ்னோபோர்டிங்) 'சிறந்த ஆக்ஷன் விளையாட்டு வீரர்' விருதையும் வென்றனர்.
கேப்ரியல் அரௌஜோ 'மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்' விருதையும், டோனி குரூஸ் 'விளையாட்டு உத்வேகம்' விருதையும், நதியா கொமனெசி 'வாழ்நாள் சாதனையாளர்' விருதையும் பெற்றனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 'சிறந்த அணி' விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் விருது கிடைக்கவில்லை .