நீர்வழிப் போக்குவரத்துகளை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக லேடிஸ் (LADIS) என்ற புதிய தளத்தை இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் (IWAI - Inland Waterways Authority of India) அறிமுகப்படுத்தியுள்ளது. .
இது கப்பல் மற்றும் சரக்குக் கப்பல் ஆகியவற்றின் நிகழ்நேரத் தகவல்களை அளிக்கும். எனவே அவற்றின் உரிமையாளர்கள் திட்டமிடப்பட்டவாறு தேசிய நீர்வழிப் பாதைகளில் பயணத்தை மேற்கொள்ள முடியும்.
இது தேசிய நீர்வழிப் பாதைகளின் மீதான சிறந்த பயன்பாட்டை உறுதி செய்வதற்கான ஒரு படியாகும்.