TNPSC Thervupettagam

வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணப் பதிவு மசோதா, 2019

February 19 , 2019 2359 days 748 0
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணப் பதிவு மசோதா 2019ஐ அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இது இந்தியக் குடிமக்களில் பெரும்பாலும் வெளிநாடு வாழ் இந்தியப் பெண்களின் கணவர்களால் அவர்களது மனைவிகள் ஏமாற்றப்படுவதற்கு எதிராக அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் மற்றும் அதிக பொறுப்புடைமையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த புதிய மசோதாவின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கிடையே நிகழும் திருமணத்தை இந்தியாவிலோ அல்லது இந்தியத் தூதரகங்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள இந்திய அலுவலகங்களிலோ திருமணம் நடந்து 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
  • இந்தத் திருமணத்தை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவில்லையெனில் வெளிநாடு வாழ் இந்தியரின் கடவுச் சீட்டு இரத்து செய்யப்படும். மேலும் அவர்களுக்கு அழைப்பாணை மற்றும் பிடியாணை உத்தரவு வழங்கப்படும்.
  • இந்த மசோதா பின்வரும் சட்டங்களில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
    • கடவுச் சீட்டுகள் சட்டம், 1967 மற்றும்.
    • பிரிவு 86 A-ஐ இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்