TNPSC Thervupettagam

வங்காள நரி மற்றும் பொன்னிறக் குள்ளநரி பாதுகாப்புத் திட்டம்

November 8 , 2026 6 days 88 0
  • வங்காள நரிகள் மற்றும் பொன்னிறக் குள்ளநரிகளைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு 2026 ஆம் ஆண்டில் ₹1.3 கோடியை அனுமதித்துள்ளது.
  • இந்திய வங்காள நரி (வல்பஸ் பெங்கலென்சிஸ்) மற்றும் பொன்னிறக் குள்ளநரி (கேனிஸ் ஆரியஸ்) ஆகியவை வேட்டையாடுபவைகளாகவும் பின்னந்திண்ணி விலங்குகளாகவும் செயல்பட்டு சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன.
  • இரு உயிரினங்களும் IUCN செம்பட்டியலின் கீழ் தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் (Least Concern - LC) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • இரண்டும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை I-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • வனவிலங்கு பாதுகாப்பிற்கான மேம்பட்ட நிறுவனத்தின் (AIWC) ஆரம்பநிலை ஆய்வில், தமிழ்நாட்டில் கடந்த 3-4 தசாப்தங்களில் இவற்றின் மக்கள் தொகை மற்றும் பரவல் வரம்புகள் குறைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்