வங்காள நரி மற்றும் பொன்னிறக் குள்ளநரி பாதுகாப்புத் திட்டம்
November 8 , 2026 6 days 87 0
வங்காள நரிகள் மற்றும் பொன்னிறக் குள்ளநரிகளைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு 2026 ஆம் ஆண்டில் ₹1.3 கோடியை அனுமதித்துள்ளது.
இந்திய வங்காள நரி (வல்பஸ் பெங்கலென்சிஸ்) மற்றும் பொன்னிறக் குள்ளநரி (கேனிஸ் ஆரியஸ்) ஆகியவை வேட்டையாடுபவைகளாகவும் பின்னந்திண்ணி விலங்குகளாகவும் செயல்பட்டு சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன.
இரு உயிரினங்களும் IUCN செம்பட்டியலின் கீழ் தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் (Least Concern - LC) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை I-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
வனவிலங்கு பாதுகாப்பிற்கான மேம்பட்ட நிறுவனத்தின் (AIWC) ஆரம்பநிலை ஆய்வில், தமிழ்நாட்டில் கடந்த 3-4 தசாப்தங்களில் இவற்றின் மக்கள் தொகை மற்றும் பரவல் வரம்புகள் குறைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.