வடகிழக்குத் திருவிழாவின் 6-வது பதிப்பு புதுடெல்லியில் அக்டோபர் 28 அன்று நடைபெற்றது.
இந்திய சர்வதேச மைய விழாவின் 15-வது பதிப்பும் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறுகிறது.
இந்த திருவிழாவானது வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சகத்தின் வடகிழக்கு மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘வடகிழக்கு இலக்கு’ என்ற நிகழ்வின் ஒரு பகுதியாகும்.
இந்திய சர்வதேச மையத்தின் 15வது ஆண்டு விழாவாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் கருத்துரு “Experiencing the North East” என்பதாகும்.
இவ்விழாவானது அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகலாயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகியவற்றின் புகழ்மிக்க கலாச்சாரப் பண்பாடுகளை சித்தரிக்கிறது.