புதுதில்லியில் ஏரோ சிட்டியில் 3 நாட்கள் நடைபெறும் இந்திய கைபேசி மாநாட்டின் 2வது பதிப்பு முடிவுற்றது.
தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மீது டிஜிட்டல் தொலைத் தொடர்புகளில் ஆய்வு செய்வதற்காக சிறப்புக் கவனம் செலுத்தும் ஒரு வழக்கமான மேடை இதுவாகும்.
இந்த ஆண்டிற்கான கருத்துரு : “புதிய டிஜிட்டல் வரைகோடுகள்: இணைத்து, உருவாக்கி, புதுமைப்படுத்து” (New Digital Horizons: Connect. Create. Innovate) என்பதாகும்.
இது இந்திய கைபேசி இயக்குநர்கள் சங்கத்தாலும், இந்திய அரசின் தொலைத் தொடர்பு துறையாலும் இணைந்து நடத்தப்பட்டது.