TNPSC Thervupettagam

வந்தே பாரத் 2.0

October 8 , 2022 1031 days 1470 0
  • குஜராத்தின் காந்திநகர் நிலையத்தில் காந்திநகர் - மும்பை வந்தே பாரத் விரைவு இரயிலினைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கும் இந்தப் புதிய வந்தே பாரத் விரைவு இரயிலானது, இந்தியாவின் மூன்றாவது வந்தே பாரத் விரைவு இரயில் ஆகும்.
  • இது முதலில் புது டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இரண்டாவது இரயிலானது புது டெல்லி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா பாதையில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • வந்தே பாரத் விரைவு இரயில் 2.0 ஆனது பயணிகளுக்கு விமானச் சேவை போன்ற சேவைகள் மற்றும் கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்டப் பாதுகாப்பு அம்சங்களை வழங்கும்.
  • இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்