TNPSC Thervupettagam

மகிழுந்துகளில் 6 கவசக் காற்றுப் பைகள்

October 8 , 2022 1031 days 437 0
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பயணிகள் தங்களது வாகனங்களில் குறைந்தபட்சம் ஆறு கவசக் காற்றுப் பைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
  • இது அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் பொருந்தும், அவற்றின் விலை மற்றும் மாறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், முதன்மையாக நிறுவப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • போக்குவரத்துத் துறை அமைச்சகமானது முன்னதாக 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல், எட்டு பயணிகள் வரை பயணிக் கூடிய வாகனங்களில் ஆறு கவசக் காற்றுப் பைகளை நிறுவ வேண்டும் என்று கட்டாயமாக்கியது.
  • அமைச்சகமானது, 1989 ஆம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன விதிகளை (CMVR) திருத்தம் செய்து, மகிழுந்துத் தயாரிப்பாளர்கள் கவசக் காற்றுப் பைகள் நிறுவ வேண்டும் என்ற ஆணையை அமல்படுத்தும் வகையில் ஒரு வரைவு அறிவிப்பையும் வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்