பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் வனத்தில் வசிக்கும் சமூகங்களுக்கு வன உரிமைகளை வழங்குவதற்கான சட்டத்தினைச் செயல்படுத்துவதனை "எளிதாக்கச் செய்வதற்காக" மத்திய அரசானது, ஒரு கட்டமைப்பு வழிமுறைகளுக்கு நிதியளிக்கத் தொடங்கியுள்ளது.
வன உரிமைகள் சட்டமானது (FRA) 2006 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
கடந்த 19 ஆண்டுகளாக இந்த வன உரிமைகள் சட்டத்தைச் செயல்படுத்துவது மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச அரசாங்கங்களின் அதிகார வரம்பிற்குள் உள்ளது.
தார்தி அபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் (DAJGUA) திட்டத்தின் கீழ், மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் ஆனது இது வரை 18 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் வன உரிமைகள் சட்டத்தைச் செயல்படுத்தும் 324 மாவட்ட அளவிலான வன உரிமைகள் சட்டப் பிரிவுகளை உருவாக்க அனுமதி அளித்துள்ளது.
மேலும் கூடுதலாக இவற்றில் 17 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு மாநில அளவிலான வன உரிமைகள் சட்டப் பிரிவுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
55 பிரிவுகள் அங்கீகரிக்கப் பட்டுள்ளதுடன் இது வரையில் அனுமதிக்கப்பட்ட மாவட்ட FRA பிரிவுகளில் அதிக எண்ணிக்கையிலானவை மத்தியப் பிரதேசத்தில் உள்ளன.
இதைத் தொடர்ந்து அவை சத்தீஸ்கரில் (30), தெலுங்கானாவில் (29), மகாராஷ்டிராவில் (26), அசாமில் (25) மற்றும் ஜார்க்கண்டில் (24) உள்ளன.
FRA அமலாக்கத்தினை விரைவுபடுத்துவதற்காக இது போன்ற FRA பிரிவுகளை மத்திய அரசு முன்மொழிவது இதுவே முதல் முறையாகும்.
ஒடிசா அரசானது, இரண்டு ஆண்டுகளாக இதே போன்ற வழிமுறையைப் பயன்படுத்தி வருகிறது.