TNPSC Thervupettagam

வனம் தொடர்பான சுற்றுச்சூழல் கணக்கெடுப்பு 2025 அறிக்கை

October 1 , 2025 22 days 86 0
  • “வனம் தொடர்பான சுற்றுச்சூழல் கணக்கெடுப்பு - 2025” அறிக்கையானது புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தினால் (MoSPI) தொகுக்கப் பட்டு வெளியிடப்பட்டது.
  • 2010–11 முதல் 2021–22 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் வனப்பகுதி 17,444.61 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது.
  • இது மொத்தப் புவியியல் பரப்பளவில் 7.15 லட்சம் சதுர கிலோமீட்டர் அல்லது 21.76 சதவீதத்தினை எட்டியுள்ளது.
  • கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முறையே 4,137, 3,122 மற்றும் 2,606 சதுர கிலோமீட்டர் வனப்பகுதி அதிகரிப்புடன் அதிக அளவில் வனப் பகுதி பதிவாகியுள்ளது.
  • உத்தரக்காண்ட், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை பதிவு செய்யப்பட்ட வனப் பகுதி பங்கீட்டில் முறையே 6.3%, 1.97% மற்றும் 1.9% பங்குடன் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கொண்டுள்ளன.
  • 2013 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 7.32% அதிகரிப்புடன் 305.53 மில்லியன் கன மீட்டர் அதிகரித்துள்ளதுடன், இந்தியாவின் அதிகரித்து வரும் மரங்களின் எண்ணிக்கை, பயன்படுத்தக் கூடிய மர அளவைக் குறிக்கிறது.
  • மரங்களின் அதிகரிப்புக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகியவை முறையே 136, 51 மற்றும் 28 மில்லியன் கன மீட்டர் பங்களித்தன.
  • 2011–12 ஆம் ஆண்டில் 30.72 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இருந்த காடுகளிலிருந்து பெறப்படும் சேவைகள் ஆனது 2021–22 ஆம் ஆண்டில் 37.93 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தன என்ற நிலையில் இது தற்போதைய விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.16% ஆகும்.
  • மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கேரளா ஆகியவை முறையே 23.78 ரூபாய், 14.15 ரூபாய்  மற்றும் 8.55 ஆயிரம் கோடிகள் ரூபாயுடன் சேவை வழங்கீட்டில் மிகவும் முன்னணிப் பங்களிப்பாளர்களாக உள்ளன.
  • 2015–16 ஆம் ஆண்டில் 409.1 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த கார்பன் தக்கவைப்பு சீர்முறைச் சேவைகள் ஆனது 2021–22 ஆம் ஆண்டில் 620.97 ஆயிரம் கோடி ரூபாயாக 51.82% அதிகரித்துள்ளன.
  • அருணாச்சலப் பிரதேசம், உத்தரக்காண்ட் மற்றும் அசாம் ஆகியவை முன்னணி பங்களிப்பாளர்களாக உள்ளதுடன், 2021–22 ஆம் ஆண்டில் சீர்முறை சேவைகளின் மதிப்பு ஆனது நடப்பு விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.63% ஆக இருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்