TNPSC Thervupettagam

வயதாகும் தன்மையினை விரைவுபடுத்தும் அதீத வெப்பம்

July 3 , 2025 10 hrs 0 min 9 0
  • ஒரு புதிய ஆராய்ச்சியானது, தீவிர வெப்பம் என்பது உடலின் மூலக்கூறு நிலைகளில் வயதாகும் தன்மையினை எந்த வித அறிகுறியுமின்றி நன்கு விரைவுபடுத்தக் கூடும் என்பதைக் காட்டுகிறது.
  • அறிவியலாளர்கள் வெப்பத்தின் தாக்கத்தினைப் புகைபிடித்தல் மற்றும் அதிக மது அருந்துதல் போன்ற முக்கிய ஆபத்து காரணிகளுடன் ஒப்பிட்டனர்.
  • இந்த ஆய்வு ஆனது டிஎன்ஏவில் ஏற்படும் சில மாற்றங்களை அளவிடும் கருவிகள் "எபிஜெனெடிக் கடிகாரங்கள் எனும் வயது அளவிடல் கருவிகளை" பயன்படுத்தியது.
  • இந்தக் கடிகாரங்கள் ஆனது டிஎன்ஏ மெத்திலேற்றத்தினை கண்காணிக்கின்றன.
  • இது சுற்றுச்சூழலால் பாதிக்கப் படுகின்ற, மரபணுக்களை இயக்கவோ அல்லது அணைக்கவோ கூடிய ஒரு செயல்முறையாகும்.
  • ஆண்டிற்கு 140க்கும் மேற்பட்ட வெப்பமான நாட்கள் (90°F அல்லது 32.3 செல்சியசுக்கு மேல்) உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களில் 14 மாதங்கள் வரை உயிரியல் ரீதியாக கூடுதல் வயதானதாக பதிவானது.
  • வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார வேறுபாடுகளைக் கருத்தில் கொண்ட பிறகும் இந்த வயது அதிகரிப்பு விளைவு நீடித்தது.
  • விலங்குகளில் வெப்பம் ஆனது டிஎன்ஏவில் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டுகின்றன என்பத்டு இது மிகவும் தவறான தகவமைப்பு கொண்ட எபிஜெனெடிக் நினைவகம் என்று அழைக்கப்படுகிறது.
  • பருவநிலை மாற்றம் ஆனது விரைவான உயிரியல் வயது அதிகரிப்பு மூலம் எவ்வாறு நீண்டகால ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது குறித்தக் கவலைகளை இந்த கண்டுபிடிப்புகள் எழுப்புகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்