வரதட்சணைச் சட்டப் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்ற கருத்து
April 20 , 2026 41 days 165 0
வரதட்சணை கொடுப்பவர்கள் மீது சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடர முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு 1961 ஆம் ஆண்டின் வரதட்சணைத் தடைச் சட்டத்தை விளக்குகிறது; இச்சட்டம் வரதட்சணை கொடுப்பதையும் வாங்குவதையும் தடை செய்தாலும், பாதிக்கப் பட்டவர்களுக்கே பாதுகாப்பை வழங்குகிறது.
பிரிவு 7(3)-இன் கீழ், சமூக அழுத்தம் அல்லது நிர்ப்பந்தத்தின் பேரில் செயல்பட்டு, பின்னர் புகார் அளிக்கும் வரதட்சணை கொடுப்பவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களாகவே கருதப் படுவார்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களைத் தண்டிப்பது சட்டத்தின் நோக்கத்தை சிதைத்து விடும் என்றும், வரதட்சணைக் கொடுமை வழக்குகளைப் புகாரளிப்பதைத் தடுக்கும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
வரதட்சணை கொடுத்ததை ஒப்புக் கொண்டதற்காக மணப்பெண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தபோது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.