வரி நோக்கங்களுக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்த உலகளாவிய மன்றத்தின் 18வது நிறைவு அமர்வு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் கருத்துரு, "Tax Transparency: Delivering a Shared Vision Through International Cooperation" என்பதாகும்.
172 உறுப்பினர் வரம்புகளைக் கொண்டுள்ள உலகளாவிய மன்றமானது வரி ஏய்ப்பைத் தடுக்கவும் நிதி வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும் செயல் படுகிறது.
இந்த நிறைவு அமர்வு ஆனது கோரிக்கை சார்ந்தத் தகவல் பரிமாற்றம் (EOIR) மற்றும் தானியங்கி தகவல் பரிமாற்றம் (AEOI) ஆகிய இரண்டு முக்கியத் தரநிலைகளை மதிப்பாய்வு செய்கிறது.
2009 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய மன்றத்தில் உறுப்பினராக இருந்து வருகின்ற இந்தியா, வழிகாட்டுதல் குழு மற்றும் சக மதிப்பாய்வு குழுக்களிலும் பதவிகளை வகிக்கிறது.