இந்த உச்சி மாநாடு ஆனது உத்தரகாண்டின் டேராடூனில் நடைபெற்றது.
இதன் முக்கிய கருத்துருவானது, "Strengthening International Cooperation for Building Resilient Communities" என்பதாகும்.
இந்த உச்சி மாநாடு ஆனது, ஒத்துழைப்பை ஊக்குவித்தல், அறிவைப் பகிர்ந்து கொள்தல் மற்றும் பேரிடர் அபாயங்களைக் குறைப்பதற்கான தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உத்தரக்காண்ட் ஆனது ஹரித்வார், பந்த்நகர் மற்றும் அவுலி ஆகிய இடங்களில் மூன்று புதிய வானிலை ரேடார்களை நிறுவ உள்ளது.
சுர்கண்டா தேவி, முக்தேஷ்வர் மற்றும் லான்ஸ்டவுனில் உள்ள தற்போதைய அமைப்புகளில் நிகழ்நேர வானிலை முன்னறிவிப்புக்காக இந்தப் புதிய ரேடார்கள் நிறுவப் படும்.
இந்த நிகழ்வு ஆனது, சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்புப் பணியின் ஆண்டு நிறைவையும் குறித்தது.