2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை (ASER) ஆனது பிரதாம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் 97.2% ஆக இருந்த 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஒட்டு மொத்தச் சேர்க்கைப் பதிவு ஆனது 2022 ஆம் ஆண்டில் 98.4% ஆக அதிகரித்துள்ளன.
அரசுப் பள்ளிகளில் 2018 ஆம் ஆண்டில் 65.6% ஆக இருந்த குழந்தைகளின் சேர்க்கை விகிதமானது 2022 ஆம் ஆண்டில் 72.9% ஆக அதிகரித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் 27.3% ஆக இருந்த, அரசு அல்லது தனியார் பள்ளிகளில் 2 ஆம் வகுப்பு பாடங்களைப் பயிலும் திறன் கொண்ட குழந்தைகள் 3 ஆம் வகுப்பில் சேராமல் இடைநின்ற குழந்தைகளின் சதவிகிதம் ஆனது 2022 ஆம் ஆண்டில் 20.5% ஆக குறைந்தது.
2018 ஆம் ஆண்டில் 50.5% ஆக இருந்த, அரசு அல்லது தனியார் பள்ளிகளில் குறைந்த பட்சம் 2 ஆம் வகுப்பு பாடங்களைப் பயிலும் திறன் கொண்ட குழந்தைகள் 5 ஆம் வகுப்பில் சேர்வதற்கான சதவீதம் ஆனது, 2022 ஆம் ஆண்டில் 42.8% ஆக குறைந்தது.
தேசிய அளவில், 2018 ஆம் ஆண்டில் 44.1% ஆக இருந்த வகுத்தல் கணக்குகளைக் கையாளக் கூடிய குழந்தைகளின் விகிதம் ஆனது 2022 ஆம் ஆண்டில் 44.7% ஆக சற்று அதிகரித்துள்ளது.
தனியார் கற்பிப்பு வகுப்புகளுக்குச் (ட்யூஷன்) செல்லும் மாணவர்களை அதிக சதவீதத்தில் கொண்டுள்ள மாநிலமாக பீகார் (71.7%) உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து மணிப்பூர் (53.4%) மற்றும் ஜார்க்கண்ட் (45.3%) ஆகியவை இடம் பெற்று உள்ளன.
இதில் விதிவிலக்காக திகழும் மாநிலங்கள் குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் திரிபுரா ஆகியனவாகும்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், திரிபுரா ஆகியவை குறைவான வருகை விகிதம் கொண்ட மாநிலங்களாகும்.
மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களில் 86%க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகின்றனர்.