TNPSC Thervupettagam

வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு

December 3 , 2021 1612 days 746 0
  • தேசியப் புள்ளி விவர அலுவலகமானது வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பின் முக்கியத் தகவல்களை சமீபத்தில்  வெளியிட்டது.
  • இது ஒரு காலாண்டு அறிக்கை மற்றும் இதன் வரிசையிலான 10வது அறிக்கையாகும்.
  • இது 2021 ஆம் ஆண்டு  ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக் கட்டத்திற்கான ஒரு அறிக்கையாகும்.
  • வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை மீதான குறிகாட்டிகளை மதிப்பிடச் செய்வதே இதன் முக்கிய ஒரு நோக்கமாகும்.
  • 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே நிலவும் வேலைவாய்ப்பின்மை வீதம் 10.3% ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டில் 13.1% ஆக இருந்த நகர்ப்புறப் பெண்களின் வேலைவாய்ப்பின்மை வீதமானது 2021 ஆம் ஆண்டில் 11.8% ஆக உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 9.5% ஆக இருந்த நகர்ப்புற ஆண்களின் வேலைவாய்ப்பின்மை வீதமானது 2021 ஆம் ஆண்டில் 8.6% ஆக உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 43.7% ஆக இருந்த நகர்ப்புறத் தொழிலாளர் எண்ணிக்கை வீதமானது 2021 ஆம் ஆண்டில் 43.1% ஆக உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 47.3% ஆக இருந்த நகர்ப்புறத் தொழிலாளர் பங்கேற்பு வீதமானது 2021 ஆம் ஆண்டில் 47.5% ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்