2026 ஆம் ஆண்டிற்குள் கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் அணுசக்தியில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்களுக்கான புதியக் கடற்படைத் தளத்தை இந்தியா நிறுவ உள்ளது.
இந்தக் கடற்படை தளம் ஆனது வர்ஷா திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தப் புதியதொரு தளம் ஆனது இராம்பில்லி என்ற கடலோரக் கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட உள்ளது.
சீனாவின் ஹைனான் தீவில் விரிவான அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் தளத்தைப் போலவே, இராம்பில்லியில் உள்ள கடல் நீரின் ஆழமும் செயற்கைக் கோள்களின் கண்காணிப்பு இல்லாமல் நீர்மூழ்கிக் கப்பல்கள் தளத்திற்குள் நுழைந்து வெளியேற உதவும் வகையில் உள்ளது.
கிழக்கில் மேற்கொள்ளப்படும் வர்ஷா திட்டத்தைப் போலவே, கர்நாடகாவில் உள்ள கார்வார் தளம் சீபேர்ட் திட்டத்தின் கீழ் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது.